tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் செல்லும் சாலையில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பம் மாற்றப்படுமா?

கள்ளச்சாராய விவகாரம்: உயிரிழப்பு  64 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி,ஜூன் 27- கள்ளக்குறிச்சி கருணா புரத்தில் கடந்த 18ந் தேதி விற்பனை செய்யப் பட்ட எத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரு கிறது.

இந்நிலையில், கள்ளச் சாராயம் குடித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகேஷ் என்பவர்   வியா ழனன்று  சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இத னால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் ஓவியம், கட்டுரைப் போட்டி

புதுச்சேரி, ஜூன் 27- ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சு போட்டி ஜூலை 20 முதல் புதுச்சேரியில் நடைபெறுகிறது.

ஸ்ரீராம் இலக்கிய கழகத்தின் புதுச்சேரி மக்கள் தொடர்பு அதிகாரி ஜார்ஜ் ஸ்டீபன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே திருக்குறள், பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகளை நடத்த உள்ளது.

12 மையங்களில் போட்டி

புதுச்சேரியில் ஜூலை 28 அன்று மறைமலை அடிகள் சாலையிலுள்ள, செயின்ட் ஆண்டனிஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. புதுச்சேரி தவிர, ஜூலை 20 சென்னை, ஜூலை 21 வேலூர், ஜூலை 27 தாம்பரம் , ஆகஸ்ட் 3 கோவை, ஆகஸ்ட் 4 ஈரோடு, ஆகஸ்ட் 10 சேலம் , ஆகஸ்ட் 11 திருச்சி, ஆகஸ்ட் 17 தஞ்சாவூர் , ஆகஸ்ட் 18 திருவாரூர் , ஆகஸ்ட் 24 நெல்லை, ஆகஸ்ட் 25 மதுரை என 12 மையங்களில் இப்போட்டிகள் நடை பெறுகிறது. இடைநிலை பிரிவில் (6  முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும், மேல்நிலை பிரிவில் (9 - 12 ஆம் வகுப்பு வரையிலும், கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தெருநாயிடம் சிக்கிய சிறுவன்:  காஞ்சிபுரத்தில் தொடரும் அவலம்

காஞ்சிபுரம், ஜூன் 27 - காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளூர் அடுத்த கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரின் 5 வயது குழந்தை நிர்மல்ராஜ் வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டி ருந்த போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் கடித்ததில் வாய் பகுதியில் பலத்த காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளூர் அடுத்த கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் 5 வயது மகன் நிர்மல்ராஜ் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் விளை யாடிக் கொண்டிருந்த பொழுது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று குழந்தையின் வாய்ப்பகுதி முழுவதும் கடித்துக் குதறியது. குழந்தை நிர்மல்ராஜ் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை பாலாஜி நாயிடம் இருந்து குழந்தையை மீட்க முயலும் பொழுது பாலாஜியையும் கடித்து விட்டு நாய் தப்பி ஓடிவிட்டது.

உடனடியாக குழந்தையை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒதுக்கீடு 

விக்கிரவாண்டி, ஜூன் 27- விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிவதற்கான தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு நிலை அலு வலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் சி.பழனி  தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித் சிங் பன்சால்  முன்னிலையில் வியாழனன்று நடை பெற்றது.


 

;