எர்ணாவூரில் கட்டுமான சங்க கிளை உதயம்
சென்னை, பிப். 24- திருவொற்றியூர் எண்ணூர் பகுதிக்குழுவிற்கு உட்பட்ட திருவீதி அம்மன் ஆதிதிராவிடர் காலனியில் சென்னை பெருநகர கட்டு மான தொழிலாளர் சங்கத் தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் சேகர் தலைமையில் நடைபெற்றது. தலைவராக சேகர். செயலாளராக சாந்தி. பொருளாளராக ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நல வாரிய அடையாள அட்டையை சிஐடியு மாவட்டச் செயலாளர்.ஜெய ராமன் உறுப்பினர்களுக்கு வழங்கினார். மாவட்டச் செய லாளர் பி.லூர்துசாமி, மாதர் சங்க செயலாளர் எஸ்.பாக்கி யலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் பகுதிச் செயலாளர் ஜெ.அன்பு சிபிஎம். பகுதிக் குழு உறுப்பினர் கே.வெங்க டையா, தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.