tamilnadu

img

தேர்தல் களத்தில் 21 வயது இளம்பெண்

சென்னை மாநகராட்சித் தேர்தலில் 98-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 21 வயது இளம்பெண் வேட்பாளர் பிரியதர்ஷினி களம் இறங்குகிறார்.

இளங்கலை பட்டம் முடித்துள்ள இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.

கேரளத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்தது.

அதேபோல, தமிழகத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வருகிற நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பல இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்து களத்தில் இறக்கியுள்ளது.