tamilnadu

69 சதவீத இட ஒதுக்கீட்டினை பாதுகாத்திட உரிய நடவடிக்கை.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்....

சென்னை:
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளை  விரைந்து மேற்கொள்ள வேண்டும்  எனவும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்   தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அந்த துறையின் அதிகாரிகளை கேட்டுக்கொண் டார்.முதலமைச்சர் தலைமையில் வெள்ளியன்று (ஜூலை 9) தலைமைச் செயலகத்தில்,  பிற்படுத்தப்பட்டோர்,  மிகப்பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்  செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான கல்வி, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளைத் தொய்வின்றி விரைந்து மேற் கொள்ள முதலமைச்சர் அலுவலர்களை அறிவுறுத்தினார்.பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை எவ்விதத் தாமதமுமின்றி  செயல்படுத்த வேண்டும் என்றும், துறையின் கீழ் நடத்தப்படும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ,  மாணவியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும், தரமான உணவு வழங்கவும் அறிவுறுத்தினார்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள்
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை மேம்படுத்தி சிறப்பான கல்வி பயிற்சி அளித்து  மாணவ, மாணவியர்கள் மேற்படிப்புகளில் அதிகளவில் சேரும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், கல்வி உதவித்தொகையினைத் தேவைப்படும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் உரிய நேரத்தில் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மிதிவண்டிகளைக் கல்வியாண்டின் துவக்கத்திலேயே வழங்கிட வேண்டும் என்றும்   முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இட ஒதுக்கீடு வழக்கு
69 சதவீத இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு வரும்போது மூத்த வழக் கறிஞர்களை  நியமித்து  69 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கை மேற் கொள்ள அவர் அறிவுறுத்தினார்.தமிழ்நாடு  நரிக்குறவர் நலவாரியம்,  சீர்மரபினர் நல வாரியம், உலமா மற்றும் இதரப் பணியாளர் கள் நலவாரியங்கள் வாயிலாகப் பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் சீரிய முறையில் வழங் கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று   முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.சிறுபான்மையினருக்கான சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளான அனைத்துச்  சிறுபான்மையினருக்கும் கல்வி உதவித் தொகை வழங்குதல்,  சிறுபான்மையின இளைஞர்களுக்குத்  திறன் வளர்ப்புப் பயிற்சி, தொழில்முனைவோருக்குச் சிறப்புப் பயிற்சி, தொழில்  தொடங்க கடன் உள்ளிட்ட  பரிந்துரைகளைச் செயல்படுத்திட உரிய  நடவடிக்கை மேற்கொள்ளவும்  முதலமைச்சர்  அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில்,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர்  செஞ்சி  கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலாளர் முனைவர்  வெ. இறையன்பு உள் ளிட்ட அரசு  உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;