சென்னை,அக்.24- தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு ஒப்பு தல் வழங்கியுள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களிலும், அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ. 1,950 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட வுள்ள 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதற் கட்டமாக ரூ. 1,170 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.