tamilnadu

img

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்....   ஒப்பந்தம் கையெழுத்தானது... 

சென்னை 
தமிழக சட்டமன்ற தேர்தல் திருவிழா களைக்கட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் பரபரப்பாக சுழன்று வருகின்றன. திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடு பிடித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான ஒப்பந்தம் திமுக கூட்டணியின் தலைவரான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. 6 தொகுதிகளை பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும்,  மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டன. 

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்,மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.    

;