tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்....

சென்னை:
திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளது.திமுக -சிபிஐ இடையே தொகுதி பங்கீடு குறித்து இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக வெள்ளியன்று (மார்ச் 5) அறிவாலயத்தில் இவ்விரு கட்சிகளுக்கும்இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.இந்நிகழ்வின்போது திமுக பொருளார் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன்,  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர எ.வ.வேலு, சிபிஐ மாநில துணைச்செயலாளர்கள் கே.சுப்பராயன், மூ.வீரபாண்டி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கையா? லட்சியமா? என்று கேட்டால், லட்சியத்திற்குத்தான் முதலிடம். வகுப்புவாதத்திற்கு எதிராக களம் கண்ட மாநிலம் தமிழ்நாடு . சாதி, மதவெறிக்கு இடம் அளிக்காமல் மக்களின் ஒற்றுமையை கட்டிக்காத்து வருகிறது. சமூகநீதிக்காக வெற்றி பெற்ற மாநிலம். ஒருசில கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தி வகுப்பு வாத சக்திகள் வலுவாக காலூன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். ஒரு பக்கம்பாஜக-அதிமுக அணி, இன்னொருபுறத்தில் இதனால் உருவாக்கப்பட்ட வேறு ஒரு அணி என இரண்டுஅணிகளையும் எதிர்த்து போராடக்கூடிய திமுக  தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவது முக்கியமானது. அந்த அரசியல் தேவையை  உணர்ந்திருக்கிறது. அந்த வகையில் உயரிய லட்சியத்தோடு  திமுகவுடன் இணக்கமான முறையில் தொகுதிபங்கீட்டில் கையெழுத்திட்டுள் ளோம். போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியலை திமுகவிடம் அளித்துள் ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

;