சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காத அளவிற்கு வேகமாக பரவி வருகிறது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வருகை தருவதால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. தினசரி பலி எண்ணிக்கையும் 100-க்கு மேல் உள்ளது தமிழக மக்களை கதி கலங்க வைத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,795 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று (ஆக., 19) ஒரே நாளில் 116 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,123 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 6,384 பேர் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை (2,96,171) நெருங்கி வருகிறது. இன்னும் 53,155 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை மண்டத்தில் இன்றைய பாதிப்பு - 1,186 (மொத்தம் - 1.20 லட்சம்)