tamilnadu

img

உலகத்தர சாலை பணிகளுக்கு ரூ.531 கோடி

சென்னை, மார்ச் 18- சென்னை எல்லைச் சாலை யில் நான்காம் பகுதியான ஸ்ரீ பெரும்புதூர் முதல் சிங்கபெரு மாள் கோயில் வரையுள்ள பகுதி யில் வாகன சுரங்கப்பாதைகள், சாலை சந்திப்பு மேம்பாடு, சாலை  பாதுகாப்பு ஆகிய பணிகள் உலக  தரத்துடன் ரூ.531 கோடியில் மேற்  கொள்ளப்படும் என்று சட்டப்பேர வையில் முதலமைச்சர் தெரி வித்தார். தமது துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்க ளுக்கு பின்னர், புதிய அறிவிப்பு களை வெளியிட்ட முதலமைச்சர் கூறியதாவது:-

சென்னை சிறுசேரி முதல் மாமல்லபுரம் வரையுள்ள 14.8  கி.மீட்டர் நீளச் சாலை சேவைகளு டன் கூடிய 6 வழிச் சாலையாக  ரூ. 350 கோடியில் மேம்படுத்தப்படும். ஓசூர், திருப்பத்தூர், ஈரோடு, கரூர்  ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்  சாலைகளை இணைக்கும் சாலை களில் ரூ.361கோடியில் 158 கி.மீட்டர்  நீளச் சாலைகளில் மேம்பாடு செய்யப்படும். சென்னை வெளிவட்ட சாலையில் வரும் போக்குவ ரத்தினை அதன் உடன் இணையும்  12 சாலைகளின் வழியாக பிரிந்து செல்ல ஏதுவாக, இணைப்பு சாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த நிலத்தொகுதி என்ற புதிய அணுகுமுறையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, திருப்பத்தூர் பள்ளி கொண்டா, திருச்சி மணச்சநல்லூர் -2 மற்றும் மணப்பாறை, திருத்து றைப்பூண்டி பகுதி-2 மற்றும் நன்னி லம், விருதுநகர் ஏழாயிரம் பண்ணை-குகன்பாறை, அரிய லூர் பகுதி -2, தேனி மாவட்டம் போடி ஆகிய 9 இடங்களில் புற வழிச் சாலைகள் அமைச்ச ரூ.2.40  கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.