tamilnadu

img

தியாகராஜ பாகவதர் உள்பட 5 பேருக்கு மணிமண்டபம்

சென்னை:
பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர் உள்பட 5 பேருக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14.2.2019 அன்று சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவிப்புஒன்றை வெளியிட்டார். அதன்படி திருச்சி மாவட்டம் கோ.அபிஷேகபுரத்தில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு  முழு உருவச்சிலையுடன் கூடியமணிமண்டபம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம்வடகரையாத்தூர் கிராமம் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் இடக்கரையில் அல்லாள இளைய நாயகருக்கு முழுஉருவச்சிலையுடன் கூடிய குவிமாட மண்டபம் என 5 மணிமண்டபங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.இத்தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;