சென்னை, மே 28- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, மதுரை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று அதிகமாக இருக்கும் என்றும், வழக்கத்தை விட வெப்பம் 6 டிகிரி அதிகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.எனவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுரை கூறியுள்ளது.