விழுப்புரம்.பிப்.7- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 26 ரவுடிகளை டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான காவல்துறை கைது செய்தனர். விழுப்புரம் திருநகரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் புகுந்த ரவுடிகள் நாட்டு வெடி குண்டுகளை வீசியும், அரிவா ளால் வெட்டியும் அதன் மேலாளரை கொலை செய்து விட்டு தப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள ரவுடிகளின் சட்டவிரோதச் செயல்பாடு களை ஒடுக்கும் வகையிலும், கண்காணிப்பை தீவிரப்ப டுத்தும் வகையிலும், விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கர் மேற்பார் வையில் காவல் ஆய்வாளர்கள் கனகேசன், ராபின்சன், நந்த கோபால், உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமை யில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விழுப்புரம் உள்கோட்ட காவல் நிலையங்களில் உள்ள ரவுடிகள் பதிவைக் கொண்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 26 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் இனிமேல் குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என உறுதி மொழி ஏற்றனர்.