tamilnadu

img

சென்னையில் ஒரே நாளில் 26 பேர் பலி

சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப் பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக முதியவர்கள் தான் கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பதாக சொல் லப்பட்டு வந்த நிலையில், இளம் வயதினர்களும் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இந்நிலையில் சென்னையில் சனிக்கிழமையன்று (ஜூன் 20) ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை யில் 9 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்5 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், இஎஸ்ஐ மருத்துவமனையில் 2 பேர், ரயில்வேமருத்துவமனையில் 3 பேர், ஓமந்தூரார்அரசு மருத்துவமனையில் 2 பேர்  என மொத்தம்26 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலன் இன்றி ஒரே நாளில் உயிரிழந்தனர்.