கடலூர், ஜூன் 26- கடலூரில் கள்ளச் சாராயத்தை எதிர்த்து போராடியதற்காக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட புதுப்பாளையம் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத் தோழர்கள் குமார், ஆனந்தன் 21ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று (ஜுன் 26) அனுசரிக்கப்பட்டது. புதுப்பாளையத்தில் உள்ள அவர்களது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.மாத வன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் டி.கிருஷ்ணன், தலைவர் என்.ஆர்.ஜி.லெணின், நகரத் தலைவர் செந்தமிழ்செல்வன், செயலாளர் டி.தமிழ்மணி, பொருளாளர் எல்.ராமு, சிபிஎம் நகர் குழு உறுப்பினர்கள் ஆனந்த், கிளைச் செயலாளர் ஆர்.எம்.ரமேஷ், வழக்கறிஞர் ஜோதிலிங்கம், குமாரின் சகோ தரர் மாரிமுத்து, தாயார் சாவித்திரி உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவமனையில் வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.