உளுந்தூர்பேட்டை, ஜூன் 5- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (38). இவர் 2 கோழிப் பண்ணைகளை வைத்துள்ளார். இந்நிலையில் கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பண்ணைகளும் முற்றிலும் எரிந்தன. இதில் 1,000க்கும் மேற்பட்ட கோழிகளும், தீவனங்களும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. தீ விபத்தில் சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.