tamilnadu

img

மாத்தூரில் 15 ஆட்டோக்களின் கண்ணாடி உடைப்பு

சென்னை, ஏப். 29- மாதவரம் பால்பண்ணை காவல் நிலை யத்திற்கு உட்பட்ட மாத்தூர் எம்எம்டிஏ பகுதி யில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.  இங்கு 3 பிரதான சாலைகளும், 120க்கும் மேற்பட்ட குறுக்கு தெருக்களும் உள்ளன.

இதனால் இப்பகுதி யில் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இதற்கிடையே, கடந்த  சில நாட்களாக மாத்தூரில் நள்ளிரவு நேரங்க ளில் மது போதையில் சிலர் சுற்றி வந்து, அங்கு சாலையோரம் நிறுத்தப்படும் ஆட்டோக் களின் முன்பக்க கண்ணாடிகளை அடித்து உடைத்து வருகின்றனர்.

மேலும் இங்குள்ள பூங்கா மற்றும் பயன்படுத்தப்படாத காலி கட்டிடங்களில் தங்கி மது அருந்துதல் மற்றும் கஞ்சா புகைப் பது உள்பட பல்வேறு சமூக விரோத செயல் களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மாத்தூர் எம்எம்டிஏ பகுதி யில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட ஆட்டோக் களின் கண்ணாடியை போதை ஆசாமிகள் உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்ததும் போதை ஆசாமிகள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு களை ஆய்வு செய்து, போதை ஆசாமி களை தேடி வருகின்றனர்.