tamilnadu

img

புதுவையில் 12ஆவது இளையோர் பரிமாற்ற முகாம்

புதுச்சேரி, ஜன. 18- 12ஆவது இளையோர் பரிமாற்ற முகா மில் 4,000 பேர் பங்கேற்க உள்ளதாக புதுச்சேரி  துணை மாவட்ட ஆட்சியர் சவுரவ் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழங்குடியின மக்கள்  நாட்டில் அன்றா டம் நடக்கும் நிகழ்வுகளை அறிய முடியாம லும் மற்ற மக்களுடன் நேரடி தொடர்பு இல்லா மலும் வாழ்ந்து வருகின்றனர். நல்ல கல்வி  வழங்கவும், அவர்கள் மற்ற மக்களோடு இணைந்து வாழவும் பழங்குடி இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப் பட்டு வருகின்றது. இதுவரை 11 முறை பரி மாற்ற முகாம்கள் நடைபெற்றுள்ளன.  12ஆவது முகாம் ஜனவரி   19ஆம் தேதி  முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சி நேரு யுவகேந்திரா சங்கதன் மத்திய அரசின் உள்துறை அமைச்சக உதவி யோடு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 20 மாநிலங்களில் இருந்து  4 ஆயிரம் பேர் 20 குழுக்களாக பங்கேற்கின்ற னர். சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்  பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் இருந்து 200 பேர் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு புதுச்சேரியின் கலை, கலாச்சாரம், மொழி மற்றும் வாழ்க்கை முறை குறித்து தெரிவிக்கப்படும். முகாமின்போது அங்கன்வாடி, ஆரம்பசுகாதார நிலையம், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்படுவர். இதன் தொடக்க  நிகழ்ச்சி 20ஆம் தேதி காலை துணை நிலை  ஆளுநர் கலந்து கொண்டு துவக்கி வைக்கி றார். நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல்வர் நாரா யணசாமி கலந்து கொண்டு பரிசுகளை வழங்க  உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின்போது நேரு யுவகேந்திரா வின் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில இயக்கு நர் எம்.என்.நடராஜ், புதுச்சேரி ஒருங்கி ணைப்பாளர் தெய்வசிகாமணி ஆகியோர் உடமிருந்தனர்.

;