tamilnadu

img

கொரோனா சிகிச்சைக்காக  118 புதிய வாகனங்கள்

சென்னை:
கொரோனா காலத்தில் உரிய நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவும் வகையில், புதிதாக 118 ஆம்புலன்ஸ் களை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தற்போது தமிழகம் முழுவதும் ஆயிரத்து ஐந்து 108 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த சேவையை விரிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக, 103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக, 118 ஆம்புலன்ஸ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.அடிப்படையான மற்றும் மேம்பட்ட, உயிர்காக்கும் அவசர வசதிகளை கொண்ட இந்த ஆம்புலன்ஸ்களில் செயற்கை சுவாசக் கருவி, ஆக்சிஜன் அளவீட்டு கருவி, மின் அதிர்வு சிகிச்சை கருவி போன்ற உயர்தர கருவிகளுடன் 60 மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை கையாள அவசரகால மேலாண்மையில் தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளனர். இந்த ஆம்புலன்ஸ்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.