tamilnadu

img

6 மாவட்டங்களில் ரூ.10,399 கோடி முதலீடு... முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், விழுப்புரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 8 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 10,399 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொடங்கிட உள்ளன.இதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  முன்னிலையில் தலைமை செயலகத்தில் திங்களன்று (ஜூலை 20) நடைபெற்றது.  இதுகுறித்து அரசு விடுத் துள்ள அறிக்கையில் “புதிய முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழில் சூழலின் விளைவாகவும் தொடர்ந்து பல புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மே.27 அன்று, தொழில்துறை சார்பில், ஜெர்மனி, ஃபின்லாந்து, தைவான், பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்களுடன் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இத்திட்டங்களின் மூலம் சுமார் 47,150 நபர்களுக்ப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.அதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் முன்னிலையில் திங்களன்று  8 புதிய தொழில் திட்டங் களை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப் பந்தங்கள் கையெழுத்திடப் பட்டன. தற்போது நிலவிவரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 8 திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங் களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப் பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இத்திட்டங்களின் விவரங்கள்:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள இண்டோஸ் பேஸ் தொழிற் பூங்காவில், விக்ரம் சோலார் நிறுவனம், 5,423 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 7,542 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சோலர் செல் மற்றும் அதன் தகடுகள் உற்பத்தி செய்யும் திட்டத் திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டு வந்த Solar Cell மற்றும் Module, இத்திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிஜிடி சத்ராஜ் பிரைவேட் நிறுவனத்தின், தொழிற்பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.கோயம்புத்தூர் மாவட்டத் தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அக்யுசெப் நிறுவனத்தின் டக்டைல் அயர் பவுண்டரி அமைப்பதற்கான திட்டத்திற் கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.ராணிப்பேட்டை மாவட்டத் தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், என்டிஆர்கட்டமைப்பு நிறுவனம், 125 ஏக்கர் பரப்பளவில் அமைக்க உள்ள தொழிற் பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.  விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 36 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 465 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜிஐ அக்ரோ டெக் நிறுவனத்தின் முந் திரி பதப்படுத்தும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் – ஒரகடம் நெடுஞ்சாலையில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஹிராநந்தானி குழுமத்தைச் சேர்ந்த யோட்டா நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட 8 திட்டங்களின் மூலம் சுமார் 13,507 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் சண் முகம் தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;