tamilnadu

img

1018 ஊர்களின் ஆங்கில எழுத்துக்களில் திருத்தங்கள் தேவை: வைகோ

சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போன்றே ஆங்கிலத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள 1018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் திருத் தங்கள் தேவை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் அறிஞர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, தமிழ் நாட்டின் ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுகின்ற முறையில் மாற்றங்கள்செய்து தமிழ் நாடு அரசு பிறப்பித்து இருக்கின்ற ஆணை வரவேற்கத்தக்கது.

பெரும்பாலான திருத்தங்கள் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால், சில திருத்தங்களில் ஒரே அளவுகோல் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக தமிழில் நெடில் எழுத்துகளை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என இந்த ஆணை வரையறுக்க வில்லை; தெளிவுப்படுத்த வில்லை.குறிப்பாக, ‘மாயவரம்’ என்பது மயிலாடுதுறை ஆனது. ஆனால், வேதாரண்யம், திருமறைக்காடு ஆகவில்லை. ‘விருத்தாசலம்’, திருமுதுகுன்றம் ஆகவில்லை. இவையெல்லாம் நீண்டகாலக் கோரிக்கை. இது குறித்து, அரசு ஆணையில் எந்த அறிவிப்பும் இல்லை. ஆலயங்களில் உள்ள இறைவன், இறைவி பெயர்களையும் தமிழில் எழுத வேண்டும்.

‘தமிழ்நாடு’ என்பதை ஆங் கிலத்தில் ‘Tamilnadu’ என்று எழுதுகின்றார்கள். அந்த ‘ழ’ வில் மாற்றம் இல்லை. பொதுவாக, ‘zha’ என்பதை பிறமொழிக்காரர் கள் ‘ழ’ என வாசிப்பது இல்லை.அதையும் ‘Thamilnaadu’ என்று எழுதுவதே பொருத்தமாகஇருக்கும் என்று கூறியுள்ளார்.

;