tamilnadu

img

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ வழித்தடத்துக்கு 10 புதிய ரயில்கள்

சென்னை, மார்ச் 6- வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர்  மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இயக்குவ தற்காக 10 புதிய மெட்ரோ ரயில்கள் ஆந்திர  மாநிலம் தடா அருகே உள்ள ஸ்ரீசிட்டியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்கட்ட மாக வண்ணாரப்பேட்டை- விமான நிலை யத்துக்கு வழித்தட பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது. பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை- திரு வொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் வழித்தட பாதை நீட்டிக்கப்பட்டது. இதை யொட்டி வருகிற ஜூன் மாதம் முதல் இந்த  வழித்தட பாதையில் மெட்ரோ ரயில் சேவை  தொடங்கப்பட உள்ளது. வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடத்தில் இயக்குவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் ரூ.200 கோடி செல வில் புதிய ரயில்கள் தயாரிக்கப்பட்ட 10 புதிய  ரயில்கள் சென்னை கொண்டு வரப்பட்டது. கோயம்பேடு பணிமனையில் இந்த புதிய ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பல்வேறு ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. புதிய தண்டவாள பாதையில் இயக்குவதற்கு ‘பிரேக்’ சோதனைகள், தண்ணீர் கசிவு சோத னைகள், மெதுவான, அதிவேக இயக்க பரி சோதனைகள் ஆகியவை நடைபெற்று வரு கின்றன. இந்த ஆய்வு பரிசோதனைகள் முடிவ டைந்ததும் புதிய ரயில்கள் ஜூன் மாதம் முதல் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.

பஸ், ரயிலுக்கு ஒரே டிக்கெட் 

சென்னையில் பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணம் செய்ய  ஒரே டிக்கெட் வழங்கும் வகையிலான திட்டம்  குறித்து ஆய்வு செய்யப்பட்டது. உலக வங்கி, தெற்கு ரயில்வே, சென்னை மெட்ரோ  ரயில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உலக வங்கி ஒத்து ழைப்புடன் ஒரே ‘ஸ்மார்ட் அட்டை’ மூலம் பஸ்,  மின்சார ரயில், மெட்ரோ ரெயில்களில் பய ணிக்கும் வகையில் திட்டம் பற்றி அதிகாரி கள் கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். இதை விரைவில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.