tamilnadu

img

இந்நாள் ஜன. 28 இதற்கு முன்னால்

1573 - சமயச் சுதந்தரத்திற்கான முதல் ஐரோப்பியச் சட்டமான ‘வார்சா கன்ஃபெடரேஷன்’ போலந்தில் நிறைவேற்றப் பட்டது. சமயம் தொடர்பான சுதந்தரம் என்பது, பிற மதங்களின் இருப்பை ஏற்றுக்கொள்ளும் சமயச் சுதந்தரம், தனிமனிதர்களின் வழிபாட்டில் தலையிடாத வழிபாட்டுச் சுதந்தரம் என்று இரண்டு வகையில் குறிப்பிடப்படு கிறது. வணிகத்துக்காக வரும் பிறநாட்டவரின் சமய நம்பிக்கைகளில் தலையிடாத நடைமுறை மிகப் பண்டைய காலத்திலேயே இருந்திருக்கிறது. கி.மு.550இல் உரு வாகக்கப்பட்ட, முதல் பாரசீகப் பேரரசு என்று குறிப்பிடப்படும் அகாமனீயப் பேரரசு சமயச் சுதந்தரத்தைக் கொள்கையாகவே கடைப்பிடித்திருக்கிறது. கி.மு.3ஆம் நூற்றாண்டுக் கால இந்தியாவின் மவுரியப் பேரரசில் அசோகர் முழுமையான சமயச் சுதந்தரத்தை அளித்திருந்தார். யூதம் உள்ளிட்ட பெரும்பாலான சமயங்களைச் சகித்துக்கொண்ட ரோமா னியர்கள், கிறித்தவத்தை மட்டும் ஏற்கவில்லை. சமயச் சுதந்தரத்துக்காக கி.பி.311இல் இயற்றப்பட்ட மிலன் உத்தரவு ரோமில் கிறித்தவத்துக்கு இடமளிக்க, 380இல் இயற்றப் பட்ட தெஸ்ஸலோனிக்கா உத்தரவு கிறத்தவத்தைத் தவிர்த்து, பிற மதங்களனைத் ்தையும் தடைசெய்தது! இஸ்லாம் உருவானபோதே, பிற சமயங்களின் சுதந்தரத்தை உறுதிப்படுத்துவதை, 622இல் நபிகள் உருவாக்கிய மதினா சாசனத்திலேயே விதியாகக் குறிப்பிட்டுவிட்டார்.  

இதன்படி, பாதுகாக்கப்பட்டவர் என்ற பொருளுடைய ‘திம்மி’ என்ற முறைப்படி, பிற சமயத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. பிற சமயங்களைச் சேர்ந்த வயது வந்த ஆண்களிடம் ஜிஸ்யா என்ற வரி வசூலிக்கப்பட்டாலும், பொதுப்பணிக ளுக்காக இஸ்லாமிய ஆண்களிடம் மசூதிகளிலேயே வசூலிக்கப்பட்டுவிடும் ஸக்கத் வரிக்கு மாற்றாகவே அது வசூலிக்கப்பட்டது. கத்தோலிக்க சமயத் தலைமையின் பிடியி லேயே அரசுகள் இருந்ததால், இடைக்கால ஐரோப்பிய நாடுகளில், பிற சமயங்களைப் பின்பற்றுவதைத் தேசவிரோதமாகவே கருதிய கடுமையான கட்டுப்பாடுகள் நிலவின. கிறித்தவத்திலேயே சீர்திருத்த (ப்ராட்டஸ்ட்டணட்) திருச்சபையைப் பின்பற்றியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்ட நிகழ்வுகூட இத்தொடரிலேயே இடம்பெற்றிருக்கிறது.

மிகஅதிக சமயச் சகிப்புணர்வுகொண்ட சமயமாக இந்து சமயம் குறிப்பிடப்படுகிறது. ஏனென்றால், சமயம் சாராத பண்பாடுகளின் அடிப்படையில் உருவானது இந்தியச் சமூகம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.  சமயம் என்பது தனிப்பட்ட மனிதனின் அடிப்படை உரிமை என்பது ஐக்கிய நாடுகள் அவையாலேயே ஏற்கப்பட்டுவிட்ட இக் காலத்தில், இந்தியா அதற்கு எதிர்த்திசையில் பயணிக்க முற்பட்டால், அது இந்து சமயத் திற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் எதிர்த்திசையிலான பயணமாகவே அமையும்!

;