tamilnadu

img

தென் கொரியாவில் 2-ஆம் கட்ட கொரோனா அலை...  

சியோல் 
சீனாவிற்கும், ஜப்பானிற்கும் இடையே மஞ்சள் கடல்பகுதியில் அமைந்துள்ள தென்கொரியா நாடு கொரோனா எழுச்சி பெற்ற காலத்தில் அதிக சேதாரத்தை சந்தித்தது. 

பின்னர் கடுமையாக போராடி ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தியது (பச்சை மண்டலம் பெறாமல்). குறிப்பாக மருத்துவ சேவையில் துடிப்பாக செயல்பட்டு பலி எண்ணிக்கையை குறைத்தது. 11 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், பலி எண்ணிக்கை 300-க்குள் இருந்தது உலக நாடுகளுக்கு பெரும் ஆச்சர்யத்தை அளித்தது. அந்த சமயத்தில் தென் கொரிய நாட்டை பல்வேறு நாடுகள் பாராட்டி கொண்டாடியது. 

இந்நிலையில், மே மாத கடைசியிலிருந்து அந்நாட்டில் கொரோனா வைரஸ் 2-ஆம் கட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளது. தினமும் 30-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 59 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு  மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது.  எனினும் பலி எண்ணிக்கை மிக குறைவு தான். தினமும் ஒன்றிரண்டு பேர் மட்டுமே பலியாகி வருகின்றனர்.மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 280 ஆக உள்ளது. 

10 ஆயிரத்து 800 பேர் குணமடைந்துள்ளதால் இன்னும் 1457 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.  கொரோனா இல்லாத நாடு என்ற பெருமையை பெற கடுமையாக போராடி வரும் தென் கொரியாவிற்கு தனது 2-வது அலை மூலம் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது கொரோனா வைரஸ். 

;