tamilnadu

img

பொலிவியாவில் மீண்டும் ஜனாதிபதி ஆனார் மொரேல்ஸ்

அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகின

லா பாஸ்,  அக். 25 - பொலிவியாவில் அக்டோபர் 20 ஆம்  தேதியன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 99.99 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இது அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்பட்டுள்ளது. பொலிவியத் தேர்தலில் முதல் சுற்றில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற  பதிவான வாக்குகளில் 50 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால், முதலாவதாக வரும் வேட்பாளர் 40 சதவிகித வாக்கு களைப் பெற்று, அவருக்கு அடுத்த படியாக வருபவரை விட 10 சத விகிதத்திற்கும் அதிகமான வாக்கு களைப் பெற்றால் இரண்டாவது சுற்றைத் தவிர்க்கலாம். தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் நிலையில், மொரேல்சுக்கு 47.07 சத விகித வாக்குகளும், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் கார்லோஸ் மெசா வுக்கு 36.51 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்த லில் வெற்றி பெற்று தொடர்ந்து ஜனாதி பதி பொறுப்பில் இருந்து வரும் இடது சாரித் தலைவரான மொரேல்சின் ஆட்சியில் பெரும் அளவிலான வளர்ச்சி ஏற்பட்டது. 13 சதவிகிதத்திற்கும் மேல் இருந்த எழுத்தறிவின்மை ஒழித்துக் கட்டப்பட்டது.  சோசலிச கியூபாவுடன் இணைந்து மேற்கொண்ட கல்வித்திட்டத்தின் மூலம் முழுமையாக எழுத்தறிவு பெற்ற  நாடாக பொலிவியா மாறியது. கடுமை யான வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைந்து விட்டது. எரிசக்தித்துறை, அரசின் வசம் வந்ததால் அதன் மூலமாக வந்த வரு மானம் சாதாரண மக்களின் பிரச்ச னைகளைத் தீர்க்கப் பயன்படுத்தப் பட்டது.

பொலிவியாவின் எண்ணெய் மற்றும்  எரிவாயு மீதான தங்கள் கட்டுப் பாட்டை அமெரிக்க பகாசுர எண்ணெய்  நிறுவனங்கள் இழந்ததால், மொரேல்சைப் பதவியிலிருந்து தூக்கி எறிவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன. எதிர்க்கட்சி களுக்குத் தங்களது ஆதரவினைத் தந்தன. மேற்கத்திய ஊடகங்களும், அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பும் மொரேல்சுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதில் மும்முரமாக ஈடுபட்டதைத் தேர்தல் நேரத்தில் காண முடிந்தது. தற்போதும்  மொரேல்சின் வெற்றிக்கு எதிராக கலகத்தைத் தூண்டிவிட அமெரிக்க ஆதரவுக் கைக்கூலிகள் சூழ்ச்சி மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், ஈவோ மொரேல்ஸ் வெற்றி பெற்றதற்கு வெனிசுலா, மெக் சிகோ அரசுகள் வாழ்த்து தெரிவித்திருக் கிறது. கொலம்பியாவின் பழங்குடி மக்கள் கூட்டமைப்பும் தனது வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. அக்டோபர் 27 ஆம் தேதியன்று உருகுவே மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் ஜனாதிபதித் தேர்தல் கள் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிக் கொள்கைகளை அமல் படுத்தும் மொரேல்ஸ் வெற்றி பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கதாகும்.

;