2002ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் நடுவில் சீனாவின் குவாங்டாங் மகாணத்தின் ஃபோஷன் நகரில் சார்ஸ் நோய் திடீரென வெடித்துக் கிளம்பியது. என்ன நடக்கிறது என்பதை மருத்துவர்களால் சுலபமாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. இதன் காரணமாக, 2003 பிப்ரவரி மாதத்தின் மத்தியில், ஒரு வார காலத்தில் “100க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்த ‘மர்மமான தொற்று நோய்’ பற்றி விவரித்து சீனாவின் சுகாதாரத் துறை, உலக சுகாதார அமைப்பின் பீஜிங் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. “இதனால் பீதியடைந்துள்ள மக்கள் தற்போது தங்களது உயிரை எந்த மருந்துகளெல்லாம் காப்பாற்றும் என எண்ணுகிறார்களோ அவற்றை எல்லாம் மருந்துக் கடைகளிலிருந்து வாங்கிக் குவிக்கிறார்கள். எனவே, மருந்துக் கடைகள் காலியாகி வருகின்றன” என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.
சார்ஸ் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த 8 மாத காலம் பிடித்தது.
இதன் விளைவாக, எந்தவொரு சுகாதார அவசர நிலையும் கை மீறிச் செல்வதற்கு முன் அது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நேரடி தகவல் தெரிவிப்பு நடைமுறையை ஏற்படுத்தியது. தெளிவாக வரையறுக்கப்பட்ட தொற்று நோய்களுக்கு இந்நடைமுறை மிகச் சிறந்த முறையில் செயல்படுகிறது. இத்தகைய இரண்டு நிகழ்வுகள் பற்றி ப்யூடான் பல்கலைக்கழகத்தின் சுகாதாரப் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் டாக்டர் ஹூ ஷான்லியன் விவரிக்கிறார். போலியோ நோய் ஒழிப்புக்கான நிபுணர் குழுவின் அங்கமாக, குவிங்காய் நகரில் இரண்டு போலியோ நோயாளிகளை டாக்டர் ஹூவின் குழு கண்டுபிடிக்கிறது. உள்ளூர் அரசு இது குறித்த தகவலை மத்திய அரசுக்கு அளிக்கிறது. உடனடியாக போலியோவிலிருந்து பாதுகாக்கும் நடைமுறையைத் துவக்கியதோடு, சீனாவிற்கு இறக்குமதியாகியிருந்த போலியோமைலிட்டிஸ் நோய்க்கிருமியை சீரிய முறையில் கட்டுப்படுத்திடஇனிப்புப் பண்டத்தின் வாயிலான தடுப்பு மருந்தை குழந்தைகளுக்கு அளித்தது. அதைப் போன்றே, மங்கோலியாவினுள் அடங்கியிருக்கும் தன்னாட்சி மண்டலத்திலிருந்து பெய்ஜிங்கில் ப்ளேக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகள் பற்றி அவர் தெரிவிக்கிறார். “நேரடி தகவல் தெரிவிப்பு நடைமுறையிலிருந்து இது போன்ற நோய்கள் பற்றி வேகமாக தகவல்களைத் தெரிந்து கொள்ள இயலும்” என அவர் எழுதினார்.
ஏற்கனவே நன்கு அறியப்பட்ட போலியோ, ப்ளேக் போன்ற நோய்களைப் பற்றி முன்னெச்சரிக்கை நடைமுறையில் சுலபமாக தகவல் தெரிவித்திட இயலும். ஆனால், குழப்பமடையச் செய்யும் வைரஸ்களை மருத்துவர்கள் எதிர்கொள்ளும்போது, இந்நடைமுறை அவ்வளவு எளிதாக செயல்பட இயலாது. வுஹானில் மருத்துவமனை பரிசோதனை அறிக்கைகள் சிலவற்றை தன்னுடன் பணிபுரிபவர்களுடன் பகிர்ந்து கொண்ட டாக்டர் யெய் பென், கல்லீரல் அழற்சி, எலும்புருக்கி நோய் போன்ற வழக்கமான நோய் எனில் நேரடி தகவல் அளிப்பு நடைமுறை மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது என குறிப்பிடுகிறார்.
“ஆனால் இம்முறை இதற்கு முன் அறிந்திராத நோயாக” இது இருந்தது என அவர் குறிப்பிடுகிறார். “நாம் ஏற்கனவே அறிந்துள்ள நோய்க்கிருமிகள் (மெர்ஸ், ஹெச்1என்1 போன்றவை) அல்லது வேகமாகப் பரவாமல் இருப்பதோடு ஓர் வரம்பிற்குட்பட்டு மனிதர்களிடையே பரவும் நோய்க்கிருமிகள் (ஹெச்7என்9 போன்றவை) போன்றவற்றிற்கு உலகின் பெரும்பாலான நாடுகளில் காணப்படும் நடைமுறைகளை விட, சீனாவின் நேரடி தகவல் அளிப்பு நடைமுறை மிகவும் வலுவானதாக உள்ளது” என ஷாங்காயின் டாக்டர் ஜாங் வென்ஹாங் குறிப்பிடுகிறார். புதிய வகையான வைரஸ்களை எதிர்கொள்ளும்போது, மருத்துவப் பணியாளர்களும், நேரடி தகவல் அளிப்பு நடைமுறையும் திகைப்படைந்து தடுமாற்றம் கொள்கின்றனர்.
ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று பற்றி தெளிவற்ற நிலை உள்ளபோது அது குறித்து மருத்துவமனையில் உள்ள நோய் கட்டுப்பாட்டுத் துறைக்கு தகவல் அளிப்பதே மிகச் சிறந்த நடைமுறையாகும். இந்த நடைமுறையைத்தான் டாக்டர் ஜாங் ஜிக்சியான் செயல்படுத்தினார். அவரது உயரதிகாரியான மருத்துவமனையின் தலைவர் உள்ளூர் நோய் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டார். இதனையடுத்து அம்மையம், சீனாவின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தையும், தேசிய சுகாதார மையத்தையும் தொடர்பு கொண்டது. டாக்டர் ஜாங் எச்சரிக்கை விடுத்த 5 நாட்களில், வுஹானில் தோன்றியுள்ள மர்ம வைரஸ் பற்றிய தகவல் உலக சுகாதார அமைப்பிற்கு அளிக்கப்பட்டது.
ஜனவரி 21ம் தேதியிலிருந்து நிலைமை குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு தினந்தோறும் வெளியிட்டது. டிசம்பர் 31ம் தேதி துவங்கி ஜனவரி 20ம் தேதி வரை நடைபெற்ற நிகழ்வுகளை முதல் அறிக்கை விளக்குகிறது. “சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரத்தில் இதற்கு முன் அறிந்திராத தொற்று காரணமாக நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்” என்ற தகவல் உலக சுகாதார அமைப்பின் சீன அலுவலகத்திற்கு டிசம்பர் 31ம் தேதியன்று அளிக்கப்பட்டது என்பதை அறிக்கையின் முதல் புல்லட் பாயிண்ட் தெரிவிக்கிறது. ஜனவரி 7ம் தேதியன்று ஒரு புதிய வகையான கொரோனா வைரஸ் கிருமி வகையை சீன அதிகாரிகள் வேறுபடுத்தினர். அதன் பின்னர், இந்த வைரஸ் கிருமியை கண்டறிவற்கான கருவிகளை உருவாக்கும் நடைமுறைக்காக இப்புதிய கொரோனா வைரஸ் கிருமியின் மரபணு தொடர் பற்றி தகவல்களை ஜனவரி 12ம் தேதி அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பது பற்றிய துல்லியமான தகவல்கள் அதன் முன்னர் வெளிவந்திருக்காது.
புதுமையான கொரோனா வைரஸ் பற்றி தகவல்களுடன் நேரடி தகவல் அளிப்பு நடைமுறை ஜனவரி 24, 2020 அன்று மேம்படுத்தப்பட்டது. அனுபவத்திலிருந்து அது படிப்பினையை கற்றுக் கொண்டுள்ளது.