tamilnadu

img

சிரியாவில் எரிவாயு குழாய் வெடிப்பு - நாடு முழுவதும் மின்சாரம் துண்டிப்பு

சிரியா, டமாஸ்கஸ் 

சிரியா டமாஸ்கஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் குழாய் எரிவாயு குழாய் வெடித்தது. இதனால் சிரியா முழுவதும் மின்சாரம் செய்துள்ளதாக, அந்நாட்டின் மின்சாரதுறை அமைச்சர் கூறியுள்ளார்.

சிரியாவில் எரிவாயு குழாய் வெடிப்பு தாக்குதலால், ஒரே இரவில் நாடு முழுவதும் மின்சார துண்டிப்புக்கு காரணமாக அமைந்தது என்று அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதே போல மின்சார துறை அமைச்சரும் கூறியுள்ளார். சிரியாவின் அட்ரா மற்றும் அல்-தமீர் இடையே சென்ற எரிவாயு குழாய் வெடித்துள்ளது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க வேண்டும் என்று எண்ணெய் மற்றும் கனிமவள அமைச்சகம் கூறியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை அளிக்கவில்லை. அந்த வெடிப்பில் ஏற்பட்ட தீப்பிழப்புகள் இரவு நேரத்திலிலும் பலரால் படங்களை எடுத்து பகிரப்பட்டுள்ளது.

டமாஸ்கஸ் பகுதியில்  குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் மின்சாரம் இல்லாமல் திங்களன்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சில மின் நிலையங்கள் மீண்டும் இணைக்கப்பட்டு முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விடியற்காலையில் மின்சாரம் படிப்படியாக பல மாகாணங்களுக்கு திரும்பி வருகிறது. இந்த சம்பவம் அரசாங்கத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களின் தொடர்ச்சியாகும். ஜனவரி மாதம், சிரியாவின் அரசாங்கம் பனியாஸ் சுத்திகரிப்பு நிலையத்தின் மத்திய தரைக், கடல்வழி குழாய்களில் வெடிபொருட்களை வெடிக்க செய்துள்ளனர். அதற்கு பின்னரும், தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது.

சிரியாவின் போரில் 380,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது மற்றும் போருக்கு முந்தைய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை 2011 ல் தொடங்கியதிலிருந்து அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் அடக்குமுறையுடன் இருந்துள்ளனர். இதனால், டமாஸ்கஸ் ஆட்சி முக்கிய எண்ணெய் வயல்களின் கட்டுப்பாட்டை இழக்க செய்துள்ளது., மேலும் மாநில ஹைட்ரோகார்பன் வருவாய் பில்லியன் கணக்கான டாலர்களால் வீழ்ச்சியடையச் சந்தித்துள்ளது.

;