tamilnadu

img

கொரோனா பலி எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது. 
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று தற்போது உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பலியானோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் உலகளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக இத்தாலி 15,887, ஸ்பெயின்  13,055, அமெரிக்கா 9,620, பிரான்ஸ் 8,078, பிரிட்டன் 4,934, ஈரான் 3,603, சீனா 3,329 பேர் பலியாகினர்.
இந்த சூழலில் கொரோன தொற்றால் 12,82,040 பேர் பாதித்துள்ள நிலையில் 269,451 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்கா 3,36,851, ஸ்பெயின் 1,35,032, இத்தாலி 1,28,948 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.