tamilnadu

மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கல்

சிவகங்கை, ஜூலை 17- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 80 ஆயிரம் மாண வர்களுக்குமே மாதத்திற்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப் பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.  மே மாதத்திற்கானசத்துணவு மாண வர்களுக்கு வழங்கப்படாததால் அதனை உலர் உணவுப்பொருட்களாக அரிசி, பருப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கைஒன்றியம் அண்ணா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் சத்துணவு பிரிவுவீரராகவன் தலைமை வகித்தார்.ஊராட்சித்தலை வர் அர்ச்சுனன், துணைவட்டார வளர்ச்சி அலுவலர், சுந்தரம், தலைமையாசிரியர் சண்முகசுந்தரி முன்னிலை வகித்தனர். சத்துணவு அமைப்பாளர் சாந்தி 150 மாணவர்களுக்கு வழங்கினார். முதல் வகுப்பு முதல் 5 ம் வகுப்புவரையுள்ள மாணவர்களுக்கு தலா மூன்று கிலோ 100 கிராம் அரிசி, ஒரு கிலோ 200 கிராம் துவரம்பருப்பு, 6 முதல்8 ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 4 கிலோ 650 கிராம் அரிசி, ஒரு கிலோ 250 கிராம் துவரம்பருப்பு வழங்கப்பட்டது.

;