திருவண்ணாமலை, அக். 10- திருவண்ணாமலையில் 3 ஆவது புத்தக கண்காட்சி திருவிழா வெள்ளியன்று (அக்.11) துவங்குகிறது. மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக் கம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழாவின் துவக்க விழா வெள்ளியன்று(அக்.11) காலை 11 மணிக்கு திரு வண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெறு கிறது. முதன்மைக் கல்வி அலுவலர் இல.நடராஜன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் க.சு.கந்தாமி கண் காட்சியை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். முதல் விற்பனையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் வெ.ஜெயக்குமார் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். புத்தக கண் காட்சி ஆண்டாள் சிங்கார வேலு திருமண மண்டபத்தில் அக்.11 முதல் 20 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறு கிறது. இந்த புத்தக கண் காட்சி திருவிழாவை முன் னிட்டு, 20 சதவீத கழிவு கூப் பன்களை சிபிஎம் திரு வண்ணாமலை ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.ராமதாஸ், ஜி.பன்னீர், டி.கே.வெங்கடே சன், கமலகண்ணன் ஆகி யோர் வாசகர்களிடமும் மாணவர்களிடமும் விநி யோகம் செய்தனர்.