சேலம், மே16- ஜவுளிக் கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில்லறை ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜவுளி கடை உரிமையாளர்கள் கூறுகையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவினால் ஜவுளிக்கடைகள் திறக்காமல் மூடப்பட்டது. இந்நிலை யில் தமிழக அரசு அண்மையில் 34 வகையான தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு கடைகளுக்கு தளர்வு அளித்து அரசாணை அறிவித்தது. இதில் ஜவுளிக்கடை திறப்பதற்கான அறிவிப்பு இல்லாதது வேதனை அளிக் கிறது. கடந்த 55 நாட்களாக, கடைகளை திறக்காமல் இருந்தபோதிலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகி றோம்.
இதற்கு மேலும் அரசு கடை திறக்க அனுமதி வழங்க வில்லையெனில் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிடும். மேலும், இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகிவிடும். இதனால் ஜவுளி கடைகளுக்கு தளர்வு அளித்து ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும் என கூறினர்.