tamilnadu

img

அரசு ஊழியர்களுக்கு  5 நாள் மட்டுமே வேலை

காங்டாக்:
17-வது மக்களவைக்கான தேர்தலுடன், 32 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிக்கிம் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைப்பெற்றது. இதில், 25 ஆண்டுகால சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆட்சியைத் தோற்கடித்து, சிக்கிம் கிராந்திகர் மோர்ச்சா புதிதாக ஆட்சியைப் பிடித்துள்ளது. 

மாநிலத்தின் முதல்வராக பிரேம்சிங் தமாங் என்று அழைக்கப்படும் பி.எஸ். கோலே பதவியேற்றுள்ளார்.முன்னதாக, சிக்கிம் மாநிலத்தில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களின் வேலைநாட்கள் 5 நாட்களாக குறைக்கப்படும்; சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்று கோலே வாக்குறுதி அளித்திருந்தார்.
அந்த வகையில், முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே, மாநில அரசு ஊழியர்களின் வேலைநாட்களை 5 ஆக குறைத்து அறிவித்துள்ளார். கூடுதலாக ஒரு நாள் கிடைக்கும் விடுமுறையை, அரசு ஊழியர்கள், அவரவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் உடல் நலத்தைக் கவனிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

;