tamilnadu

img

ஊழல் பெருச்சாளிகளுக்கு காவலாளி மோடி


பிரதமர் மோடி, “நாட்டுக்கு அல்ல; ஊழல் பெருச்சாளி களுக்குதான் காவலாளி’’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து பூந்தமல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:  சர்வாதிகார மோடி அரசை யும், எதற்கும் உதவாத எடப்பாடி அரசையும் வீழ்த்தி 40 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் வெற்றிக் கொடிநாட்டி, தலைவர் கலைஞர் நினைவிடத்தில் வெற்றி மாலையாக சமர்ப்பிப்போம். தேர்தல் பிரச்சாரத்திற்கு நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் காட்டிய அதே உற்சாகமும் ஊக்கமும் எள்ளளவும் குறையாமல் இந்த திருவள்ளூரிலும் உள்ளது. திருவள்ளூர் தொகுதி மட்டுமல்ல புதுச்சேரி உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றியை பெறப் போகின்றது, என்பதையே இது காட்டுகிறது. அதேநேரத்தில் மத்தியில், மோடி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாஜக ஆட்சியையும், மாநிலத்தில் எடப்பாடி தலைமையில் நடை பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய அ.தி.மு.க ஆட்சியையும், வீட்டிற்கு அனுப்புவதற்காக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். ஆட்சியாளர்கள் மீதுள்ள கோபத்தை வெளிப் படுத்துவதற்கு மக்கள் புறப்பட்டி ருக்கிறார்கள்.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என ஒருகாலம் இருந்தது. ஆனால், நம்முடைய காலத்தில் தெற்கை நம்பி ஆட்சி நடந்திருக்கின்றது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இந்த தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசின் துணையோடு நிறைவேற்றி தந்திருக்கின்றோம்.


இந்த பழைய வரலாறுகள் எல்லாம் எடப்பாடிக்கு தெரிய வாய்ப்பே கிடையாது. அதனால்தான் எடப்பாடி, தி.மு.கவும், காங்கிரசும் ஒன்றாக ஆட்சியில் இருந்த பொழுது என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி, மத்தியில் பாஜக ஆட்சி. இரண்டு கட்சிகளும் இப்போது கூட்டணி. தமிழகத்திற்காக இந்த இரண்டு கட்சிகளும் என்ன செய்தன? இதற்கு எடப்பாடி பதில் சொல்ல

வேண்டும். மத்தியில் சர்வாதிகாரியும், மாநிலத்தில் உதவாக்கரையும் இருந்தால் இந்த நாட்டிற்கு கெடுதல் தான். சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டு முறை அதிமுக

அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது திமுக அதை ஆதரித்து வாக்களித்தது. அந்த தீர்மானத்தை சட்டமாக்க மத்திய அரசு முன்வர வில்லை. இப்பொழுது அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை 

ரத்து செய்வோம் என்று சொல்லியிருப்பது நாட்டுமக்களை ஏமாற்றத்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.  இவர்களிடம் ஏமாற தமிழக மக்கள் இனியும் தயாராக இல்லை. பிரதமராக இருக்கக்கூடிய மோடி தேர்தல் பிரச்சாரத்தில் நான்இந்தியாவின் காவலாளி என்கிறார். அவர் இந்தியாவின் காவலாளி அல்ல, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய ஊழல் பேர் வழிகளான எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் 

ஆகியோருக்கு காவலாளி, ஊழலுக்கு காவலாளி, இந்திய ராணுவ வீரர்களை காப்பாற்ற முடியவில்லை. ஆனால், இந்தியாவை விட்டு தப்பி ஓடுகின்ற பணக்காரர்களை காப்பாற்றுகின்ற காவலாளியாக மோடி இருக் கின்றார் அதுதான் உண்மை. அதிமுக -பாஜக கூட்டணி அமைவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய மக்களவைத் துணைத்தலைவர் மு.தம்பிதுரை பி.ஜே.பி ஆட்சியில் கட்டிய கழிப்பறைகள் அனைத்தும் ஒன்றுகூட முறையாக இல்லை, ஊழல் நடந்திருக்கிறது என்று குற்றம்சாட்டினார். அப்படிப்பட்ட பாஜகவுடன் அதிமுக கூட்டு சேர்ந்துள்ளது. 


பொள்ளாச்சி விவகாரமும், பொல்லாத ஆட்சிக்கு உதாரணம். இதுபோல் இப்படி ஒரு கொடுமை இதுவரைக்கும் நடந்தது இல்லை. இனி நடக்கப்போவதும் இல்லை. அப்படி ஒரு கொடுமை. 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் 7 வருடமாக இந்த ஆட்சியில் சீரழிந்துஇருக்கின்றார்கள். இதற்கு பக்கபலம் யார் என்று கேட்டீர் களென்றால் சட்டப்பேரவைத் துணைத்தலைவராக இருக்கக் கூடிய பொள்ளாச்சி ஜெயராமன். அவருடைய இரண்டு மகன்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். 7 வருடமாக இது நடந்து கொண்டிருக்கின்றது என்றால் காவல்துறையே இல்லையா? உளவுத்துறை என்பதே கிடை யாதா? மாநிலத்தில் ஆட்சியே இல்லையா? பொள்ளாச்சி ஜெயராமன் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் கிடையாது. ஆனால் அவர் ஏன் பதற்றம்அடைந்தார் என்பது தான் என்னுடைய கேள்வி. எனவே, இப்படிப் பட்ட கொடுமைகள் நடக்கும் அக்கிரம ஆட்சி, அதற்குத் துணை நிற்கும் மத்திய ஆட்சி இந்த இரண்டு ஆட்சிகளை அப்புறப்படுத்த தான், நாடாளுமன்றத்தின் தேர்தலும், சட்டமன்றத்தின் இடைத்தேர்தலும் வரவிருக்கின்றது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

;