tamilnadu

img

பாஜக அமைச்சரின் சொத்து இரட்டிப்பு!

சண்டிகர், அக்.5- ஹரியானா மாநில நிதியமைச்ச ராக இருந்தவர் அபிமன்யு. பாஜக தலைவர்களில் ஒருவரான இவரது சொத்து மதிப்பு, 5 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அபிமன்யுவின் சொத்து மதிப்பு, 2014-இல் ரூ. 77 கோடியே 36 லட்சமாக இருந்தது தற்போது 170 கோடியே 41 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாகியுள்ளது. பாஜக தலைவர் அபிமன்யுவின் சொத்து அவரது பெயரிலும் மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் உள் ளன. இவரது அசையும் சொத்துக்கள் ரூ. 76 கோடியே 46 லட்சம். அசையாச் சொத்துக்கள் மதிப்பு ரூ. 93 கோடியே 95 லட்சம். மற்றொரு பாஜக வேட்பாளர் பிரேம் லதா, இவர் முன்னாள் மத்திய அமைச்சர் பிரேந்திர சிங்கின் மனைவி யாவார், இவரும் பணக்கார வேட்பா ளர்களில் ஒருவராக இருக்கிறார். 

இவர், தன்னிடம் ரூ. 49 லட்சத்து 45 ஆயிரம் பெறுமான லேண்ட் ரோவர் வாகனம் உள்ளது என்றும், தனது கணவரிடம் மெர்சிடஸ் பென்ஸ் கார் உள்ளது என்றும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

;