tamilnadu

img

வெள்ளப் பெருக்கை பார்க்காமல் இறந்த டி.ஆர்.ஜி வீரரின் உடலை நடந்தே எடுத்து வந்த சோகம்

டி.ஆர்.ஜி. வீர்ர் சுக்மா  மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமையன்று இரவு இறந்துள்ளார்.

மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக, சிஆர்பிஎப் பணியாளர்கள் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) வீரரின்  சடலத்தை ஆற்றின் குறுக்கே கால்நடையாக எடுத்துச் சென்றுள்ளனர்.

சனிக்கிழமை வீரர் இறந்த நிலையில் ஞாயிறன்று வீரரின் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்ல  ஆம்புலன்ஸ்சை அழைத்துள்ளனர். ஆனால், பெஜி கிராமம் பகுதியில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகரிக்க தொடங்கியது. இதனால், மருத்துவமனை உள்ள பகுதியான இஞ்சாரம் கிராமத்தில் தண்ணீரின் வரத்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால், அவரது உடலை எடுத்து செல்ல முடியவில்லை.

தகவலறிந்த, சி.ஆர்.பி.எப்  வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். 2 மணி நேரம் காத்திருந்தனர்.  ஆற்றில் வெள்ளப்பெருக்கு சற்று தணிந்த உடனே உடலை  கால்நடையாக எடுத்து வந்து அவரது வீட்டில் சேர்த்துள்ளனர்.

இறந்தவரின் குடும்பத்தினர் சிஆர்பிஎஃப் பணியாளர்கள் சரியான நேரத்தில் தலையிட்டதற்கும், உடல் தங்கள் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்ததற்கும் நன்றி தெரிவித்தனர். 

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.  இதனை கண்டா இணையவாசிகள் சிஆர்பிஎப் வீரர்களை பாராட்டி வருகிறார்கள்.

;