tamilnadu

2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்,மே 23- சத்தீஷ்கரில் 2  நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் மன்காபல் கிராமத்தில் கதிராஸ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியுள்ளனர் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சனிக்கிழமையன்று அந்த பகுதிக்குச் சென்ற காவல்துறையினர், தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.இதில்  நக்சலைட்டுகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.  அவர்களுடன் வந்தவர்கள் அடர்ந்த காட்டுக்குள் தப்பியோடி விட்டனர்.   இதில் சுட்டுக்கொல்லப்பட்ட மலாங்கீர் பகுதிக்கான உள்ளூர் கொரில்லா படைத்தளபதி குன்டாத்தூர் என்பவர் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.