tamilnadu

img

பஞ்சாலையை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர் போராட்டம்

கோவை, மே 5-
கோவை அருகே பஞ்சாலையில் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராமல்  இருப்பதை கண்டித்தும் பாக்கி கூலியை உடனடியாக வழங்கக்கோரியும்  ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், அரசூர் பகுதியில் வேலவன் டெக்ஸ்டைல்ஸ் என்ற பஞ்சாலை இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கினால் இந்நிறுவனத்தில் பணியாற்றிய வெளி மாவட்ட தொழிலாளர்கள் சுமார் 20 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, தண்ணீர் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் ஆலை நிர்வாகத்தால் செய்து தரப்படவில்லை. இவர்களுக்கு தற்போது அரசூர் ஊராட்சி சார்பில் உணவு  மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் பஞ்சாலை ஊதிய பாக்கியை கொடுக்காமல் இழுத்தடித்தாகவும், பெண் தொழிலாளர்களை ஆலை மேலாளர் இழிவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து தொழிலாளர்கள்  பஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பாக்கி ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும், தங்களை  சொந்த ஊர்களுக்கு அனுப்ப  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் வலியுறுத்தினர். பின்னர் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சொந்த ஊர் செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து  போராட்டம் கைவிடப்பட்டது.