மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத்தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் இன்று காலை பாறைகள் உருண்டு வீடுகள் மீது விழுந்தன. இதில் 4 வீடுகள் இடிந்து விழுந்தன. . இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த சம்பவத்திற்கு கேரளமுதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.