காலம் கடத்தாமல் பேச்சுவார்த்தையை துவக்க ஏற்றுமதியாளர் சங்கத்திற்கு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
திருப்பூர், அக்.25- திருப்பூர் பனியன் தொழி லாளர்கள் சம்பள உடன்பாடு 2025 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்ட நிலை யில், புதிய சம்பள ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தையை மேலும் காலம் கடத்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் திற்கு, அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. திருப்பூர் ஏஐடியுசி அலுவலகத்தில் சனி யன்று அனைத்து பனியன் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு பனியன் சங்க தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், பொதுச் செயலாளர் ஜி.சம்பத், ஏ.ஐ.டி.யூ.சி செயலாளர் என்.சேகர், எல்பிஎப் தலைவர் ஜி.பாலசுப்ரமணியம், ஏடிபி நிர்வாகி விஸ்வநாதன், ஐ என் டி யு சி செயலாளர் சிவ சாமி, எச்எம்எஸ் செயலாளர் முத்துசாமி, எம் எல்எப் நிர்வாகி வெங்கடாசலம், பி.எம்.எஸ் நிர்வாகி ஆர்.செந்தில்குமார், டி.டி.எம்.எஸ். மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இதில் பனியன் ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் வேலை செய்யும் தொழிலாளர்க ளின் 2021 ஆம் ஆண்டு போடப்பட்ட சம்பள ஒப்பந்தம், கடந்த செப்டம்பர் மாதம் முடிவ டைந்து விட்டது. புதிய சம்பள உயர்வு பேச்சுவார்த்தை யை துவங்குவதற்கு உற்பத்தியாளர் சங் கங்களுக்கு தொழிற்சங்கங்கள் சார்பில் கடி தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சம்பளப் பேச்சு வார்த்தையை துவக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. கடுமையான விலை வாசி உயர்வால் கஷ்டப்படும் தொழிலாளர்க ளுக்கு மேலும் காலம் கடத்தாமல் உடனடி யாக சம்பள உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்குவதற்கு ஏற்ற முறையில் சம்பள ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவக்க வேண் டும் என அனைத்து தொழிற்சங்கங்கள் சார் பில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் மற்றும் பொதுச் செயலா ளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
