tamilnadu

img

கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் வீச்சு

கோவையில் பெரியார் சிலை மீது காவி வண்ணம் வீசிய விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் காவி பெயிண்ட் வீசி சென்றுள்ளனர். இதை காலை 5.30 மணியளவில் கண்ட பெரியார் அமைப்பினர் அப்பகுதியில் குவியத் தொடங்கினர். தகவலறிந்து வந்த குனியமுத்தூர் காவல் துறையினர் தண்ணீர் ஊற்றி பெயிண்டுகளை அகற்றினர்
இந்த விவகாரத்தில் போத்தனூர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் காவல்துறையில் சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த காவல் துறையினர்  கலகம் ஏற்படுத்துதல், சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.