ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் அமைப்பு தின விழா
தருமபுரி, செப்.12- ஊரக வளரச்சித்துறை அலுவலர் சங்கத்தின் அமைப்பு தினம் வெள்ளியன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத் தின் 39 ஆவது அமைப்பு தின விழா மற்றும் கொடியேற்றும் விழா, தருமபுரி ஆர்டி நகரிலுள்ள சங்கத்தின் அலுவலகத் தில் வெள்ளியன்று நடைபெற்றது. முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். சங்கத்தின் கொடியை மாநில துணைத்தலைவர் ச.இளங்குமரன் ஏற்றி வைத்தார். இதில், ஊரக வளர்ச்சித்துறை உயர்நிலைப் பணி யாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் ராமஜெயம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் விம லன், மாவட்டத் தலைவர் முகமது இலியாஸ், செயலாளர் தர்மன், பொருளாளர் வினோத் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று, சங்கத்தின் அமைப்பு தினத்தை முன் னிட்டு, சேலம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் உள்ள லைஃப் டிரஸ்ட் முதியோர் இல்லத்தில் 25 முதியவர்களுக்கு காலை உணவு மற்றும் அன்றாட தேவைக்கான பொருட் கள் மாநில துணைத்தலைவர் ந.திருவேரங்கன் தலைமை யில் நடைபெற்றது. இதில், மாவச்ட்ட செயலாளர் த.ஜான் ஆஸ்டின் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.