tamilnadu

img

பாலமின்றி தவிக்கும் புளியம்பாறை மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம்

பாலமின்றி தவிக்கும் புளியம்பாறை மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம்

உதகை, ஜூன் 30 – நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா புளியம்பாறை கிராமத்தில், நாரங்கா கடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்களன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு பட்டனர். புளியம்பாறையிலிருந்து ஆமைக்குளம் கல்லூரிக்கு செல்ல நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இங்கு பாலம் அமைக்கப்படாததால் சுமார் 300 குடும்பங்கள், குறிப்பாக 150 பழங் குடியின குடும்பங்கள், பல ஆண்டுக ளாக ஆற்றைக் கடக்க சிரமப்பட்டு வருகின்றனர். சிறிது நாட்களுக்கு முன்பு கூட இந்த ஆற்றைக் கடக்க முயன்ற கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சோகமான நிகழ்வும் நடந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மேட்டுப்பாளையம் வந்திருந்த தமி ழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினி டம், புளியம்பாறையை சேர்ந்த தமிழ ரசி என்ற மாணவி பாலம் அமைக்க  கோரிக்கை விடுத்தார். அப்போது, 100 நாட்களுக்குள் கோரிக்கை நிறை வேற்றப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து, SADP திட்டத்தின் கீழ்  பாலம் அமைப்பதற்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், வனத்துறை தடை யில்லா சான்று வழங்காமல் பாலம்  கட்டும் பணி கிடப்பில் போட்டது. மாறாக, வனத்துறை அவசரகதியில் ரூ.18 லட்சம் செலவில் நான்கு அடி இரும்பு நடைபாலம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது மக்களின் நீண்டகால கோரிக் கைக்கும், முதலமைச்சர் அளித்த உறுதிமொழிக்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியது. பாலம் அமைக்கப்படும்வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடு வோம் என மார்க்சிஸ்ட் கட்சி எச் சரித்திருந்தது.  இதன்தொடர்சசியாக திங்க ளன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் உண் ணாவிரத போராட்டத்தை மேற் கொண்டனர். நாடுகாணியில் நடை பெற்ற உண்ணாவிரதப் போராட்டத் திற்கு கூடலூர் ஏரியா செயலாளர் பி. ரமேஷ் தலைமை ஏற்றார். தமிழ்நாடு  விவசாயிகள் சங்க நீலகிரி மாவட்ட  தலைவர் என். வாசு போராட்டத்தைத்  தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட்  கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் துவக்க உரையாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் இராசி  இரவிக்குமார், விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் பன் னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஏ. குஞ்சு  முகமது போராட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார். வனத்துறை உடனடியாக தடை யில்லா சான்று வழங்கி, SADP மூலம்  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைப் பயன்படுத்தி நாரங்காகடவு ஆற்றின்  குறுக்கே பாலம் கட்ட வேண்டும்.  இந்த விவகாரத்தில் தமிழக அரசு  தலையிட்டு, மக்களின் சிரமத்தைப்  போக்க உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் என போராட் டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த உண்ணாவிரதப் போராட் டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலை வர்கள் எம்.ஆர்.சுரேஷ், ஹ.சைன், சுபைர், கே.எம்.ஷாஜி, பெரியார் மணிகண்டன், சுந்தர்ராஜன், ஷரிஃப் மற்றும் 50-க்கும் மேற்பட்ட  பழங்குடியின மக்களும் பங்கேற்ற னர்.