tamilnadu

img

கோவையில் பி.ஆர்.நடராஜன் வேட்புமனுத் தாக்கல்

கோவை நாடாளளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் திங்களன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர். நடராஜன் போட்டியிடுகிறார். இவர் திங்க ளன்று கோவை மாவட்ட ஆட்சியரும், நாடாளுமன்ற தேர்தல் அலுவலருமான கு.ராசாமணியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருடன் திமுக சொத்து பாதுகாப்பு குழு தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி, திமுக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், காங்கிரஸ் கட்சி புறநகர் மாவட்டத் தலைவர் வி.எம்.சி மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர். 

அமைதி இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும் இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே செய்தியாளர்களுக்கு பி.ஆர்.நடராஜன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கோவை மாவட்டத்தின் அமைதிக்கான ஒரே வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். அனைத்து தரப்பினரும் உரிமை கொண்டாடுகிற வேட்பாளராக நான் உள்ளேன். அமைதி இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும் என்பது எதார்த்தம். உலக அளவில் பம்ப் உற்பத்திக்கு பெயர் பெற்ற கோவை தொழில் தற்போது நசுங்கி உள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற மத்திய மோடி அரசின்

சர்வாதிகார திட்டங்களினால் கோவையின் தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

ஆகவே, மத்தியில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சிறு, குறு தொழில்களை பாதுகாக்க, ஜாப் ஆர்டருக்கு போடப்பட்டுள்ள ஜி.எஸ்.

டியை முழுமையாக ரத்து செய்வோம். இதன் மூலம் சிறுகுறு தொழில்கள் வளர்ச்சியடையும், பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கமுடியும். 


பொள்ளாச்சி கொடூரம் : முழுமையான விசாரணை கோவை மாநகராட்சி மக்களின் அடிப்படை உரிமையான குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்த்து குடிநீரை வணிகமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து எதிர்த்து வரு கிறோம். இந்த மக்கள் விரோத ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்துவோம். மக்களின் அடிப்படையான குடிநீர் உரிமையை அனைவருக்கும் கிடைப்ப

தற்கான நடவடிக்கையை மேற் கொள்வோம்.  பொள்ளாச்சி பாலியல் வன்கொ டுமை விவகாரம் கோவை மாவட்டத் தையே தலைகுனிய செய்திருக்கிறது. 

இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும். கடந்த 7 ஆண்டுகளில் உயிரி

ழந்த இளம்பெண்களின் மரணங்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்

கொள்ளப்பட வேண்டும். ஆளும் கட்சி இதனை முழுமையாக விசாரிக் காது. ஆகவே ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். இதனையடுத்து சம்பந்தப் பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளி ட்டு அனைவரும் விசாரிக்கப்படுவர். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். 

மேற்குதொடர்ச்சி மலையை பாதுகாப்போம் இதேபோல், பெருமுதலாளிகளின் லாபத்திற்காக வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்களை பறிக்கும் நடவடிக்கையை தடுப்போம். கோவை மாவட்டத்திற்கு இயற்கை வழங்கிய கொடையாக மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இங்கு யானைகள் வழித்தடம் மறிக்கப்பட்டு விதிமுறைகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் மனித - விலங்கு மோதல் ஏற்பட்டு தொடர்ந்து நடைபெறும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்பது முக்கியமாக உள்ளது. ஆகவே விதிமுறை மீறிய ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவை மாவட்ட மக்களின் வரமாக இருக்கிற மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதில் முக்கியத்துவம் அளிப் போம்.

இரவு நேர பெங்களூர் ரயில் கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது புதிய 8 ரயில்களும், பாலங்கள் உள்ளிட்ட போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். இம்முறை வெற்றி பெற்றவுடன் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் வாதாடி, போராடி பெற்றுக்கொடுப்பேன். கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாய் இருக்கிற இரவு நேர பெங்களூர் ரயிலை கொண்டு வருவதற்கு உறுதி

யான நடவடிக்கையை மேற் கோள்வேன் என்றார்.

இந்தபேட்டியின்போது சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், காங்கிரஸ் கட்சியின் கணபதி சிவக்குமார் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொமதேக, முஸ் லிம் லீக், விசிக, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனி ருந்தார். முன்னதாக, மாற்று வேட்பாளராக சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் மனு தாக்கல் செய்தார். 

;