tamilnadu

img

மலைக் கிராமப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துக... மலைவாழ் மாணவர் சங்க கோரிக்கை மாநாடு வலியுறுத்தல்...

பொள்ளாச்சி:
அனைத்து மலை கிராமங்களிலும் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டுமென மலைவாழ் மாணவர்கள் சங்க கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூர் கோவிந்தசாமி ரைஸ் மில் வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மலைவாழ் மாணவர்  சங்கத்தின்  முதல் கோரிக்கைமாநாடு சனியன்று   அனிதா  நினைவரங்கில் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர்  அசாருதீன் தலைமை வகித்தார்.

இம்மாநாட்டில் மாணவர் சங்கத்தின் வெண்கொடியினை பொள்ளாச்சி தாலுகா  தலைவர் சந்தியா  ஏற்றி வைத்தார்.  தாலுகாசெயலாளர் ரமேஷ் கண்ணன் வரவேற்றுப் பேசினார்.இதனையடுத்து வழக்கறி ஞரும், எழுத்தாளருமான ச.பாலமுருகன் மாநாட்டினை துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் வி,எஸ்.பரமசிவம் மாநாட்டினை வாழ்த்திப் பேசினார். முன்னதாக, பழங்குடி மக்கள் வாழ்வியல் குறித்து ”காடர்” என்ற புத்தகத்தை எழுதியஊடகவியலாளர் வே.பிரசாந்த் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இம்மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:தமிழகத்தில்  மலைவாழ் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர உரிய போக்குவரத்து வசதி ஏற்படுத்திட வேண்டும். மலைவாழ் கிராமங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மலைவாழ் மாணவர்களின் உண்டு உறைவிடப்பள்ளி யில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திட வேண்டும். மலைவாழ் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். மலைவாழ் மாணவர்களுக்கான சாதிச் சான்றிதழை தாமதிக்காமல் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி,மாரியப்பன் மாநாட்டைநிறைவு செய்து உரையாற்றினார். இம்மாநாட்டில் மலைவாழ் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

;