tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

விளையாட்டு விடுதிகளில் சேர அழைப்பு 

திருப்பூர், ஏப்.24- தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடு திகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் வரும் மே 5 ஆம்  தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.  இது குறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல்  21  ஆம் தேதி முதல் இணையதள முகவரியில் வெளியிடப்பட் டுள்ளன. இதில், 7, 8, 9 ஆம் வகுப்புகள், 11 ஆம் வகுப்பு படிக் கும் மாணவ, மாணவிகள் இணையதளம் மூலமாக வரும் மே  5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவிலான  தேர்வு போட்டிகள் மாணவர்களுக்கு மே 7  ஆம் தேதியும்,  மாணவிகளுக்கு மே 8 ஆம் தேதியும் காலை 7 மணிக்கு  திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகி றது. மாநில, மாவட்ட அளவில் தேர்வின் போது மாணவ,  மாணவிகள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, பள்ளியில்  படிப்பதற்கான ஏதேனும் ஒரு ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர சில விளையாட்டுகளுக்கு நேரடியாக மாநில அளவிலான தேர்வு போட்டிகள் நடை பெறவுள்ளன. இதுதொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு 951 40-00777 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தக விற்பனை இயக்கம்

திருப்பூர். ஏப்.24- உலக புத்தக நாளை முன் னிட்டு திருப்பூரில் நடை பெற்ற புத்தக விற்பனை இயக்கத்தில் 8 மணி நேரத் தில் ரூ.31 ஆயிரத்து 745 ரூபாய்க்கு புத்தகங்கள் விற் பனையானது. உலக புத்தக நாளை முன் னிட்டு திருப்பூரில் பின்னல் புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக் கம் சார்பில் புதனன்று புத்தக  விற்பனை இயக்கம் நடை பெற்றது. இதில், மார்சியம் என்றால் என்ன, பகத்சிங் வாழ்க்கை வரலாறு, கூலி, உழைப்பு மூலதனம், மாபெ ரும் தமிழ் கனவு, எஸ்.ராம கிருஷ்ணன் புத்தகங்கள், தமிழ்ச்செல்வன் புத்தகங் கள் உள்ளிட்ட பல்வேறு  புத்தகங்கள் 8 மணி நேரத்தில்  ரூ.31 ஆயிரத்து 745க்கு விற் பனையானது என பின்னல் புத்தகாலயம் பொறுப்பாளர் பி.செளந்தரபாண்டியன் தெரிவித்தார்.