tamilnadu

img

புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் - கோவையில் வழக்கறிஞர்கள் போராட்டம்

ஒன்றிய பாஜக அரசால் அமல்படுத்தப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக உண்ணாவிரத போராட்டம்.

IPC, Cr PC, IEA ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களை புதிதாக வடமொழியில் BNS- பாரதிய நியாய ஷன்ஹிதா, BNSS- பாரதிய நஹ்ரிக் சுரஷா, BS- பாரதிய சஷய அதினயம் என  மாற்றப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும்.  சட்ட மாற்றம் செய்யப்பட்ட புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோவையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும், முன்பு இருந்தது போலவே ஆங்கிலத்தில் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டனர். மனித உரிமைகளை பாதுகாக்கும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளை செல்லாததாக்கும் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது காவல்துறைக்கு சாதகமாக அமைவதாகவும் தெரிவித்தனர்

;