tamilnadu

img

ஊரடங்கு காலத்தில் ஊடகம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஊதிய பிடித்தம், ஆட்குறைப்பு செய்தால் நடவடிக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை    

 கோவை,  ஏப்.7-

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,  ஊரடங்கு காலத்தில் ஆட் குறைப்பு, சம்பளம் பிடித்தல் உள்ளிட்டவை செய்யும் ஊடகம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரிக்கை விடுத்தார். மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கொரோனா பாதித்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.  கொரோனா பாதித்த 59 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க 2 ஆயிரத்து 626 படுக்கைகள் மற்றும் 385 செயற்கை சுவாச கருவிகள் கையிருப்பில் இருக்கிறது. குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. காய்கறி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை புறக்கணிக்காமல் வேண்டும் என்றார்.
 

;