tamilnadu

ஆக.1 தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆக.1 தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜூலை 11 - 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1 அன்று நியாய  விலைக் கடை ஊழியர்கள்  தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு  செய்துள்ளனர். தமிழ்நாடு நியாய விலைக் கடை  ஊழியர் சங்கம் (சிஐடியு)-வின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் ஜூலை  11-இல் விருதுநகர் எம்.ஆர்.வி நினை வகத்தில் நடைபெற்றது. மாநிலத்  தலைவர் பி.கௌதமன் தலைமை  வகித்தார். மாநிலச் செயலாளர் பா.செல்வராசு மற்றும் பொருளா ளர் சா.கிருஷ்ணராஜா, தமிழ்நாடு  கூட்டுறவு ஊழியர் சம்மேளன  மாநிலத் தலைவர் ஆ.கிருஷ்ண மூர்த்தி, பொதுச் செயலாளர் என்.ஆர்.ஆர். ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், பொது விநியோகத் திட்டத்தை தனித் துறையாக்க வேண்டும். பொது விநியோகத் திட்டப் பொருட்களை முழுமையாக ஒதுக்கி ஒரே நேரத்தில் அனை வருக்கும் கிடைத்திட ஆவன செய்ய வேண்டும். கூட்டுறவு - அரசு  ஊழியர்களுக்கும், நியாய விலைக்  கடை ஊழியர்களுக்கும் வித்தியாசம்  உள்ள 3 சதவீதம் அகவிலைப்படியை சீர்படுத்திட வேண்டும்.  புதிதாக எடைத் தராசில் புளு டூத் இணைப் பதை மறுபரிசீலனை செய்து பொருட் களை பைகளில் அடைத்து வழங்க வேண்டும்.  பிஎஸ் சர்வரை மேம்படுத்தி, கை விரல் ரேகை வைப்பதை 40 சதவீத மாக மாற்ற வேண்டும். ஊதியத்தில் பிடித்தம் செய்த பி.எப் தொகையை நிர்வாக பங்குடன் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் செலுத்தி பராமரித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1 அன்று மாவட்டத் தலைநகரங்களில் அனைத்து மண்டல  இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.