tamilnadu

img

கோழி முட்டை, கறி சாப்பிடலாம்: அமைச்சர்

சென்னை,மார்ச் 18- கோழி முட்டை, கறி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிக்கும் என்று  கூறப்படுவது உண்மையல்ல என்றும்  இதை பொதுமக்கள் நம்பவேண்டாம்.  யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் புத னன்று(மார்ச் 18)கேள்வி நேரத் தின்போது பேசிய நாமக்கல் தொகுதி  அதிமுக உறுப்பினர்  கே.பி.பி.  பாஸ்கர், “கோழி முட்டை, கறி சாப்  பிட்டால் கொரோனா வைரஸ் தாக்கும்  என பரப்பிய தவறான செய்திக ளால் நாமக்கல் மாவட்ட கோழிப்  பண்ணை தொழில் அதலபாதா ளத்திற்கு சென்று விட்டது. இந்த  தொழிலை நம்பியிருக்கும் உரிமை யாளர்கள் மட்டுமல்ல தொழிலாளர்க ளின் வாழ்வும் கேள்விக் குறியாக மாறி அழிவின் விளிம்புக்கு சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று  கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன்,“கொரோனா வைரஸ்  குறித்த தவறான பிரச்சாரத்தால் நாமக்கல் பகுதியில் கோழி முட்டை கள் கோடிக் கணக்கிலும் கறிக் கோழி களும் விற்பனை செய்யமுடியாமல் தேங்கிவிட்டதால் மிகுந்த நட்ட மடைந்துள்ளனர். இதுகுறித்து அதன்  உரிமையாளர்கள் புகார் கொடுத் துள்ளனர். முதலமைச்சரின் கவனத் துக்கு கொண்டு சென்று உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கோழி முட்டை, கோழிக் கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் தொற்று நோய் வரும் என்று கூறுவது  முற்றிலும் உண்மை கிடையாது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவை யில்லை. அனைவரும் கோழி முட்டை,  கோழிக் கறியை சாப்பிடலாம் என்றும்  அமைச்சர் தெரிவித்தார்.