tamilnadu

img

ஊழல் கண்காணிப்பு வார விழிப்புணர்வு

ஊழல் கண்காணிப்பு வார விழிப்புணர்வு

சென்னை,அக். 27- மத்திய கண்காணிப்புக் குழுவின் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் திங்கட்கிழமை (அக்.27) தொடங்கி வரும் நவம்பர் 2 வரை நடைபெறுகின்றன. “விழிப்புணர்வு நமது கூட்டுப் பொறுப்பு” என்ற இந்த ஆண்டு கருப்பொருளின் அடிப்படையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்க இயக்குநர் மனோஜ் கோயல் உள்ளிட்ட பலர் ஒருமைப்பாடு உறுதிமொழியை ஏற்றனர். ஊழல் கண்காணிப்பின் முக்கியத்துவம் குறித்து ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.