tamilnadu

img

கோவை மாநகராட்சி எல்லைகள் மூடல்

 கோவை, ஏப். 26-  கோவை மாநகராட்சியில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, மாநகராட்சி எல்லைகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில், பொதுமக்கள் யாரும் அதிகப்படியாக வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் . இதன் தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு பின்னரும் கொரோனா தொற்று இதுவரை குறைந்தபாடில்லை . தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது.

இதன் பொருட்டு தமிழக முதல்வர் விடுத்த அறிக்கையில் வரும் ஏப்.26 முதல் 29 வரை நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டார்.   இதனால் சனியன்று காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான கடை திறந்திருந்த சூழ்நிலையில் இந்த நான்கு நாட்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்ல பொதுமக்கள் அதிகமாக கூடி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல்பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனை தொடர்ந்து ஞாயிறன்று கோவையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையும் மீறி பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாடினால் கடுமையான சட்டம் பாயும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

;